சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார ஏற்ற, இறக்கங்களின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.44,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 அதிகரித்து ரூ. 5,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.74.40 ஆக விற்பனையாகி வருகிறது.தங்கத்தின் விலை ஏற்றம் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பாடுத்துகின்றது.