தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி இன்றும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.4,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.40 காசுகள் அதிகரித்து ரூ.63.70 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,400 அதிகரித்து ரூ.63,400க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து, தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.