பாகிஸ்தான் நாட்டின் காராச்சியில் அதிசய ஆடு ஒன்று கடந்த 5ஆம் தேதி பிறந்துள்ளது. முகமது ஹசன் நரிஜோ என்ற நபரில் ஆட்டு மந்தையில் பிறந்த இந்த குட்டி ஆட்டின் காதுகள் 50 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. வழக்கம்போல் இல்லமால் மற்ற ஆடுகளில் இருந்து மாறுபட்டு பிறந்துள்ள அதிசய ஆட்டின் மீது அன்புகொண்ட ஆட்டின் உரிமையாளர் பெயரிட்டுள்ளார் சம்பா என பெயரிட்டுள்ளார். அதீதமாக நீண்ட காதுகளைக் கொண்டதால் அதிசய ஆடு என்ற அந்தஸ்தை பெற்றதுடன் அந்த பகுதியில் உள்ள மக்களும் இந்த ஆட்டை நேரில் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் ஆட்டுக்குட்டியின் புகைக்கடம் வைரலாகி வருகிறது. மேலும், நீண்ட காதுகளைக்கொண்ட ஆட்டுக்குட்டி என்ற கின்னஸ் சாதனையையும் இந்த சம்பா படைத்துள்ளது.