உத்தரப்பிரதேச மாநிலம் ஷஹரன்பூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு கழிப்பறையில் உணவு தயாரிக்கப்பட்டு அங்கேயே பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பொது பயன்பாட்டுக்கான ஒரு கழிவறையில் பூரி சமைக்கப்பட்ட எண்ணை ஒரு புறம் இருக்க, அதன் அருகே தரையில் ஒரு கிழிந்த காகித்தல் பொரிக்கப்பட்ட பூரிகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறம், கபடி வீரர்களுக்கு சமைக்கப்பட்ட சாதம் மற்றும் இதர வகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதையடுத்து, மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என விளையாட்டுத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த, மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, கடந்த 16ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷஹரன்பூர் மாவட்டத்தில் நடந்த கபடி விளையாட்டுப் போட்டியில் விளையாட்டு வீரர்களுக்கு பாதி வெந்த உணவு வழங்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்ட நிலையில், தற்போது கழிப்பறையிலேயே விளையாட்டு வீரர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டது மக்களையும் விளையாட்டுத் துறையினரையும் எரிச்சலடைய செய்துள்ளது