சென்னையில் வாலிபர் ஒருவர் தனது காதலை மறுத்த கல்லூரி மாணவியிடம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடும் வாக்குவாத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆதிரமடைந்த வாலிபர் கல்லூரி மாணவியை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். ஓடும் ரயிலில் சிக்கிக்கொண்ட மாணவி பரிதாபமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த வாலிபரை 7 தனிப்படைகள் தேடி வந்தனர். இந்த நிலையில், வாலிபரை சென்னை துரைப்பாக்கத்தில் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மகள் கொலை செய்யப்பட்டதையறிந்து வேதனையடைந்த மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.