இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மசூதியின் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மசூதியின் ராட்சத குவிமாடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. எனினும், இந்த பெரும் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர்.