சென்னை: பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம்வரை நடைபெறும். இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத் தேர்வாகவும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வாகவும் நடத்தப்படும். இந்நிலையில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2023-ம்ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
2023-ம் ஆண்டு அட்டவணையின்படி, ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை 10-ம் வகுப்பிற்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
மேலும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.