உலக பணக்கார்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் கௌதம் அதானி, 137 பில்லியன் டாலர் சொத்துக்களுடன், உலகின் 3ஆவது பெரும் பணக்காரராக முன்னேறியுள்ளார். இந்த பட்டியலின் முதலிடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க்கும், இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோசும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11ஆவது இடத்தில் ரியலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.