கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. இந்த திரைப்படம், கன்னட திரையுலகில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகவும் மேலும், ரூ.200 கோடிவரை இந்த திரைப்படம் வசூலைக் குவிக்கும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.