பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அல்லது ரோலண்ட்-கார்ரோஸ் போட்டி என்று அழைக்கப்படும் முக்கிய டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய இந்தப்போட்டி நாளை மறுநாள் முடிவடைய உள்ளது. பெண்கள், ஆண்கள், பெண்கள்-ஆண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பின இரட்டையர்கள் என 5 பிரிவுகளில் நடைபெற்றது. கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான இந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், உலக டென்னிஸ் வீரர் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளவரும், 13 முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் பட்டத்தை வென்றவரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் 30ஆவது முறையாகவும், 8ஆவது இடத்தில் உள்ள நார்வே நாட்டைச் சேர்ந்த கேஸ்பர் ரூட், முதன்முறையாகவும் மோதினர். நேற்று மாலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு தொடங்கி நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தின் முடிவில், 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால். கேஸ்பர் ரூட்டை தேற்கடித்து 14ஆவது முறையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பட்டத்தை தனக்கு சொந்தமாக்கினார். போட்டியில் வென்ற நடாலுக்கு உலகம் உழுவதும் உள்ள பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதேபோல, மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப்பை -ஐ வென்று சாம்பியன் பட்டத்தை போலந்து நாட்டைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் வென்றார்.