சென்னை : 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- இன்றைய இணைய உலகத்தில், தகவலே ஆற்றலுக்கும் அதிகாரத்திற்கும் அடித்தளம். இந்த அரசின் சமூகநீதிக் கொள்கையை நிலைநாட்ட, தகவல்களையும், வாய்ப்புகளையும் பரவலாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது மிக அவசியமாகும். எனவே, முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச ‘வை-பை’ சேவைகள் வழங்கப்படும் என்று கஊரியுள்ளார்.