தமிழகத்தில் கடந்த 2018-ம்ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறைசார்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற இலவசமாக நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு, கொரோனா தொற்று பரவல் காரணமாக இணைய வழியில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் நேரடி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் 414 மையங்கள் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்துக்கு 70 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரைபயிற்சி அளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் நீட் பயிற்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.