ஆஸ்திரேலிய நாட்டின், சிட்னியில் உள்ள டாஸ்மேனியாவின் டான்சஸ்டன் நகரில் 4 வயது சிறுவனுக்கு நெருக்கடியான காலத்தில் தேசிய நெருக்கடி கால எண்ணை தொடர்பு கொள்வது பற்றி கற்றுத்தந்துள்ளார். இதற்கு அடுத்த நாள், சிறுவனின் தாய்க்கு வலிப்பு வந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அந்த சிறுவன், தாய் சொல்லுக்கொடுத்தை தக்க நேரத்தில் நினைவு வைத்துக்கொண்டு செயல்பட்டு உடனடியாக தேசிய நெருக்கடி கால எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்சை வரவழைத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்சில் இருந்த மருத்துவவர்கள் மற்றும் பணியாளர்கள் முதலுதவி அளித்து அவரை காப்பாற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறுவனின் புத்திக்கூர்மையை பாராட்டி அந்த நாட்டின் நெருக்கடி கால சேவை அமைப்பினர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளனர்.