சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.5 கோடி மதிப்பீட்டில் அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கட்டப்படும் இந்த கட்டிடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதே போல் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டிடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடங்களை 1 வருட காலத்திற்குள் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.