சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் ஓ.பி.எஸ்-ஐ துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர் இல்லையென்றால் மான்பில்லா சபாநாயகர் என்று அழைக்கப்படுவார் என்றார். அதேபோல, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை, நாங்கள் ஓபிஎஸ் போல பந்திக்கு முந்திக்கொள்ள மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.