கீவ் : உக்ரைன்-ரஷியா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். மேலும், இவர் பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், உக்ரைனுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, “ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.