நாடு முழுவதும், நேற்று முதல் (ஜூலை 1ஆம் தேதி) ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு அமலானது முதல் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனைக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த இந்த நடவடிக்கை, வரவேற்கத்தக்கது என்றும், மிக முக்கியமானதும் கூட என்று நார்வேவும், மிகசிறப்பான இந்த நடவடிக்கை பூமிக்கு இந்தியா அளிக்கும் பரிசு என்று, இந்தியாவுக்கான டென்மார்க் தூதரும் பாராட்டியுள்ளார்.