இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியுடன் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு நடக்கவுள்ளது.