மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்படி, இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கேப்டன் ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணியில், ரவீந்திர ஜடேஜா துணைக்கேப்டனாகவும், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் விக்கெட் கீப்பர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், முகமது சிராஜ், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கேப்டன் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீல் அணியில், ஷாய் ஹோப் துணை கேப்டனாகவும், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஷமர் ப்ரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜெய்டன் சீல்ஸ் – ரிசர்வ்ஸ் – ரோமரியோ ஷெஃபர்ட் , ஹேடன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.