சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் அறையில் இருந்த 5 நோயாளிகளை வேறு வார்டுக்கு மாற்றியதுடன் அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர். ஏசி இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் உருவான தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.