day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

FIFA WC 2022 பிரான்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா: மெஸ்ஸி சாதனை

FIFA WC 2022 பிரான்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா: மெஸ்ஸி சாதனை

தோகா: பிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்றகோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜெண்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.பிஃபா 22-வது உலகக் கோப்பைகால்பந்து தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் கலந்துகொண்ட இந்த பிரபஞ்ச திருவிழாவின் இறுதி ஆட்டம் நேற்று இரவுதோகாவின் லுசைல் நகரில் உள்ளலுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பட்டம் வெல்வதற்காக நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் பிரான்ஸ் அணியானது, அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது. இந்த போட்டியை காண மைதானத்தில் 88 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

21-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவை பெனால்டி ஏரியாவில் ஃபவுல் செய்தார் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பளே. இதனால் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதைபயன்படுத்தி மெஸ்ஸி அற்புதமாக கோல் அடித்தார். பிரான்ஸ் கோல்கீப்பர் மெஸ்ஸி தவறாக கணித்து இடதுபுறம் பாய்ந்தார். ஆனால் மெஸ்ஸி பதற்றமே இல்லாமல் நிதானமாக தனது இடது கால் பந்தை கோல் வலையின் வலது புறம்திணித்தார். இதனால் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

36-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா 2-வது கோலை அடித்தது.பிரான்ஸ் அணியின் முன்களம் பந்தை பறிகொடுக்க அர்ஜெண்டினாவின் முன்கள வீரர்களான மெஸ்ஸி, ஜூலியன் அல்வரெஸ் மின்னல் வேகத்தில் பந்தை கடத்திமேக் அலிஸ்டரிடம் எந்தவித இடையூறும் இல்லாமல் வழங்கினர். அவர்அற்புதமாக ஏஞ்சல் டி மரியாவுக்கு கிராஸ் செய்ய, அவர் கோல்கீப்பர் ஹ்யூகோ லொரிஸை கடந்து கோல்வலைக்குள் திணித்தார். இதனால் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

80-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவானியை பாக்ஸ் பகுதிக்குள் அர்ஜெண்டினா வீரர் நிக்கோலஸ் ஓட்டமெண்டி ஃபவுல் செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் கிளியான் பாப்பே கோல் அடித்தார். இந்த கோல் அடித்த 90 விநாடிகளில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீண்டும் ஒரு கோலை அடித்து மிரளச் செய்தார் கிளியான் பாப்பே. இந்த கோலை மார்கஸ் துராமுடன் கூட்டணி அமைத்து அற்புதமாக அடித்தார் பாப்பே. இதனால் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சியில் உறைந்தது. பாப்பேவின் இரு கோல்களால் ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது பிரான்ஸ் அணி.

105-வது நிமிடத்திலும் அடுத்த நொடியிலும் என இரு முறை அர்ஜெண்டினாவின் கோல் அடிக்கும் முயற்சிகளை அபாரமாக தடுத்தனர் பிரான்ஸ் டிபண்டர்கள். 109-வது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு நெருக்கமாக அர்ஜெண்டினாவின் மார்ட்டினெஸ் இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் லொரிஸ்தடுத்தார். அவர் மீது பட்டு திரும்பிவந்த பந்தை மெஸ்ஸி கோலாக்கினார். இதனால் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அர்ஜெண்டினாவின் அடுத்த வாய்ப்பில் பரடேஸ் கோல் அடிக்க அர்ஜெண்டினா 3-1 என முன்னிலை பெற்றது. 4-வது வாய்ப்பில் பிரான்ஸி கோலோ முவானி கோல் அடித்தார். அதேவேளையில் அர்ஜெண்டினா தரப்பில் மோன்டில் கோல் அடித்து அசத்தினார். இதனால் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையில் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978,1986-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது.

கடந்த 36 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் அர்ஜெண்டினா வாகை சூடியுள்ளது. தனது 5-வது உலகக்கோப்பையில் விளையாடிய லயோனல் மெஸ்ஸி முதன்முறையாக அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார். அரை இறுதிப் போட்டி முடிவடைந்ததுமே கத்தார் உலகக் கோப்பையுடன் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெனால்டி வாய்ப்பில் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி கோல் அடித்தார். இதன் மூலம் ஒரே உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று, கால் இறுதி சுற்று, அரை இறுதி சுற்று, இறுதிப் போட்டி என அனைத்திலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் மெஸ்ஸி. உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை ‘கோல்டன் பால்’ (தங்கப் பந்து) விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மெஸ்ஸி. 2014 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களில் அவர் இந்த விருதை வென்றுள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!