தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரில் இருக்கைத் தொடர்பான பிரச்சனை காரணமாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டத்தை கண்டித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எனினும், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரையும் கைது செய்த காவல் துறை சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்து வைத்துள்ளனர்.