சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் பிரபல தொகுப்பாளர் அசாரின் பிரபலங்களுடனான கலகலப்பான உரையாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது. மேலும் இவர். சித்தி 2 உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளதுடன் தற்போது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இயக்குநர்,நடிகர் சசிகுமாரின் காமன்மேன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் அசார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.