மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்திரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத ஹிந்தி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இரவு 10.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்து காரணமாக படப்பிடிப்பு தளம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது.