பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 2 மற்றும் 3ஆம் தேதிகளில் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கியிருந்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பாஜகவின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது, இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சி செய்த கட்சிகள் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. இந்த கட்சிகளின் வீழ்ச்சியை கண்டு கேலி செய்யாமல், அவர்களின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அடுத்த 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் காலம், உலகிற்கே இந்தியா தான் தலைமை தாங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.