சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் இரண்டு பிரிவாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 1033.15 கிலோ மீட்டருக்கு 4,070 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்காரச் சென்னை 2.0 திட்டம் ஒன்றில் 1,26.484 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற பணிகளில் 25.746 கிலோ மீட்டர் தூரம் 97.21 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டம் 2ல் 12.154 கிலோமீட்டர் உள்ள மொத்தம் பணிகளில் 11.448 கிலோ மீட்டர் தூரம் நிறைவு பெற்று 94.19 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. வெள்ள தடுப்பு பணிகளை பொறுத்தவரை மொத்தமுள்ள 76.521 கிலோ மீட்டர் தொலைவில் 62 கிலோமீட்டர் அளவுக்கு முடிவுற்றுள்ளது. சுமார் 82 சதவீதம் பணிகள் நிறைவேற்றுவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் கனமழை வரும் வரை வடிகால் பணிகளை அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி கால நீட்டிப்பு செய்துள்ளது. நேற்றுடன் இதற்கான காலகெடு முடிந்துள்ள நிலையில் அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.