வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2022-23-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மேலும் நவம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை www.incomectaxindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.