இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருபாலருக்கும் இனி சமமான சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம், இனி இந்திய மகளிர் அணியினருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிகளுக்கும் ரூ.6 லட்சமும், டி20 போட்டிகளுக்கு ரூ.3 லட்சமும் சம்பளம் பெறலாம்.