சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து 400 பேர் மீது ராயப்பேட்டை காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு ராயப்பேட்டை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதனடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்டோருக்கும், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு ஈ.பி.எஸ். ஆதரவாளர்களும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.