மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்தித்தார். அமித்ஷாவுடன் 20 நிமிடங்கள் பேசிய எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்ததாகவும் பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், நடந்தாய் வாழி காவிரி, கோதாவரி- காவிரி இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்ததாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு இருப்பதாகவும் எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் உடனிருந்தனர்.