இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 5 முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறியது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த மொயீன் அலி 14 ரன்களுக்கு அவுட்டானார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பட்லர் 30 ரன்களில் ஷமி பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இறுதியில் 25.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டு வீழ்த்தினார். பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா ,ஷிகர் தவான் இருவரும் சிறப்பாக ரன் குவித்தனர். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி,ரன்கள் குவித்தார் .ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். இதனால் இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.ரோகித் சர்மா 76ரன்னும், தவான் 31ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.