இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 49 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.