‘யங் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ள சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010ஆம் ஆண்டு வாங்கினர். இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்துள்ளார். இதையடுத்து, அமலாக்கத் துறை இதுத்தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.