பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை செய்யவும், கைது செய்யவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி உண்டு என குறிப்பிட்டுள்ளது. மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அமலாக்கத்துறை தகவல் அறிக்கையை குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.