டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, போலி மற்றும் செயல்படாத கணக்குகள் குறித்த தகவல்களை ட்விட்டர் நிறுவனத்திடம் அவர் கேட்டிருந்தார். ஆனால், அந்த தகவல்களை எலான் மஸ்க்-கிடம் ட்விட்டர் நிறுவனம் கொடுக்காமல் காலம்கடத்தவே, டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து, ஒப்பந்தப்படி நிறுவனத்தை வாங்காமல் தவறியதால் எலான் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குத்தொடுத்துள்ளது. இந்த நிலையில், ரூ.3.5 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்-க்கு விற்க ட்விட்டர் நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வியாழனன்று ட்விட்டரை வாங்குவதற்கான 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை மஸ்க் முடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெத்செகல், உயர்மட்ட சட்ட நிர்வாகி விஜயா காடே மற்றும் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் ஆகிய நான்கு முக்கிய அதிகாரிகளை நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.