வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலைகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு அங்கு காய்ச்சி வைக்கப்பட்டு இருந்த சாராயத்தை தண்ணீர் என நினைத்து காட்டு யானை ஒன்று குடித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சாராய சேகரிப்புகளையும் சேதப்படுத்திய காட்டு யானை பின்னர் பேரணாம்பட்டு ஊருக்குள் புகுந்து அங்குள்ள வனத்துறை அலுவலகத்தில் தஞ்சமடைந்ததுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்து வந்த பேரணாம்பட்டு வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வெடிவைத்து யானையை பத்திரமாக காட்டுக்குள் விரட்டியடித்தள்ளனர். காட்டு யானை சாரயத்தை தண்ணீர் என தவறுதலாக நினைத்து குடித்துவிட்டு ஊருக்குள் புகுந்ததால் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.