கோவை அருகே கேரளம் மாநிலம் கஞ்சிக்கோடு-வாளையாறு இடையே 512ஆவது கிலோமீட்டர் எல்லை பகுதியில் விவேக் விரைவு ரயிலில் அடிபட்டு ஒரு பெண் யானை இறந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த குட்டி யானை ஒன்று வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குட்டி யானையை தேடி வரும் கேரள வனத்துறையினர், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.