தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள 965 பக்க தகவல் திரட்டில், மின் கட்டண உயர்வு குறித்து எதிர்ப்பு, கருத்து தெரிவித்தவர்கள் முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கமும் அதில் அளிக்கப்பட்டுள்ளது.