சென்னை புளியந்தோப்பில் நேற்று வீட்டு பால்கனி இடிந்து விழுந்ததில் பலியான சாந்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியும் வழங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சாந்தி விபத்துக்குள்ளாகி இரண்டு மணி நேரமாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை எனவும், குறித்த நேரத்தில் வந்திருந்தால் அவரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனவும் குற்றம் சாட்டினார். மேலும், பேசிய அவர் மழைநீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை அரசு உருவாக்குவதாகவும், முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி உட்பட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியிருப்பதாகவும் விமர்சனம் செய்தார். ரூ.4 ஆயிரத்து ஐநூறு கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக ஆட்சியில் தான் எனவும், ஆனால் அதனை தொடர்ந்து செயல்படுத்த திமுக தவறிவிட்டதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் திமுகவுடன் இருந்த உறவு 1972 ஆண்டிலேயே முறிந்துவிட்டதாகவும், திமுக என்றைக்குமே பகையாளி தான் எனவும் பேசினார். அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட வேண்டியதில்லை எனவும், தேர்தல் நேரத்தில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி” எனவும் அவர் பேட்டியளித்தார்.