பெங்களூரு: மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் வரும் 13-ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 14-வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 9.30 மணியில் இருந்து காலை 11.30 மணிவரை விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளது. விமான கண்காட்சி காரணமாக பிரதமர் வருகை காரணமாகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.