சென்னை வானகரத்தில், வரும் 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக கட்சித் தலைமையில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் அழைப்பு கடிதத்தில் சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓபிஎஸ் இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொருளாளராக மட்டுமே இருப்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.