குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதையொட்டி, அவருக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று (ஜூலை மாதம் 22ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதையொட்டி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, அதையேற்று அவர் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றப்பின் பிரதமரை சந்திக்கும் முதல் பயணம் என்பதால் அரசியல் வட்டாரங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.