டிக் டாக் தளத்தில் குறுகிய நேரத்திலான வீடியோக்கள் வெளியிடுவது போலவே, யூடியூப் தளத்திலும் குறுகிய நேரத்தில் வீடியோக்களை வெளியிட ’சார்ட்ஸ்’ என்ற வசதி 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு யூட்டூப் பயனர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த சார்ட்ஸ் வீடியோக்களை உலகம் முழுவதும் ஒரு மாதத்துக்கு சுமார் 150 கோடி பேர் பார்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, சார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் 45 சதவிகிதத்தை அந்த வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கே வழங்க இருப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.