வேலூர்: முதல்வர் ஸ்டாலின் அதிகாலையிலேயே , சத்துவாச்சாரியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். கள ஆய்வு திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் வேலூரில் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், வேலூரில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை ஆய்வு செய்ததோடு , தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தையும் ஆய்வு செய்தார்.