‘பிரபஞ்ச அழகி’ எனப்படும் ’மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் 28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும், திருமணம் செய்திருக்கக்கூடாது, குழந்தை பெற்றிருக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருந்து வந்தன. இந்த நிலையில், திருமணமான பெண்களும் கர்ப்பிணிகளும் தாய்மார்களும் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை போட்டி நடத்தும் அமைப்புகள் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு உலகம் முழுவதிலும் இருக்கும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.