தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும், தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.