நடன இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகத்திற்காக, கட்டுக்கோப்பான உடல்வாகுவை கொண்டு வந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ள அவர், தனது அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்து வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால் அறக்கட்டளையை சுயமாக நிர்வகிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே நன்கொடையாளர்கள் இனி நன்கொடை வழங்காமல், தொடர்ந்து உறுதுணையாக இருக்குமாறும் அவர் அந்த பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.