திமுகவின் மாநில துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2009ஆம் ஆண்டிற்கு பிறகு இனி தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டுமே மேற்கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடமே தெரிவித்திருந்தேன். அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே முதலமைச்சர் ஸ்டாலினிடம் விலகல் கடிதம் அளித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர் இன்றைய தேதியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.