திமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக உள்ள எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி கட்சியின் சார்பு அணிகளின் நிர்வாகிகள் விவரங்களை இணைய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுகோள் வைத்துள்ளார். இதன் மூலம் பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி மு.க.ஸ்டாலினின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், கட்சி சார்ந்த அன்றாட செய்திகள், தகவல்கள் மற்றும் பதிவுகளை அனைவரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் அந்த செய்திக்குறிப்பில் எழுதியுள்ளார்.