சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்றார். அங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் பிளவு கிடையாது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதால்தான் சிலர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும். 96 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. போதைப்பொருளை விற்பதே திமுகவினர் என்பதால்தான் அதை கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியவில்லை என தெரிவித்துள்ளார்.